இலங்கை

கடல் சீற்றத்தில் சிக்கி காணாமல்போன மீனவர்

Published

on

கடல் சீற்றத்தில் சிக்கி காணாமல்போன மீனவர்

  களுத்துறை, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

கடலில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

சம்பவத்தில் களுத்துறை, தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவரே காணாமல்போயுள்ளார்.

விபத்தின் போது மீன்பிடி படகில் 6 பேர் இருந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மீன்பிடி படகு கடந்த 15 ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ள நிலையில் இன்றைய தினம் மீண்டும் கரைக்கு திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளது.

Advertisement

காணாமல்பொனவரை தேடும் பணிகளில் கடற்டையினர் ஈடுபட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version