இலங்கை
கனமழையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு ; தாழ்நில பகுதிகளுக்கு எச்சரிக்கை

கனமழையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு ; தாழ்நில பகுதிகளுக்கு எச்சரிக்கை
மலையகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால், முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று (19) காலை முதல் நிரம்பி வழிகின்றதுடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதனால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தினசரி வேலைகளில் ஈடுபட முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்நில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.