இலங்கை

குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

Published

on

குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

  பஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது இந்திய இளைஞர், விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கேரளாவை சேர்ந்த 27 வயது இந்திய இளைஞர் பஹ்ரைன்-கோழிக்கோடு விமானத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. 

Advertisement

குறித்த இளைஞர் அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஹ்ரைன் சென்றுள்ளார்.

பஹ்ரைன் சென்றது முதல் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவு  காரணமாக அவதிப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் .

ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக தாயகம் திரும்பய நேரத்தில் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

பெரிய கனவுகளுடன் சென்ற அவர் உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்தது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version