இலங்கை

கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் மாற்றுப் பொருள்; மாற்றியது யார்?

Published

on

கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் மாற்றுப் பொருள்; மாற்றியது யார்?

  கொழும்பு பம்பலப்பிட்டி இரவு விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் மாற்றுப் பொருள் இருப்பது குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மதுபானத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

கடந்த பெப்ரவரி மாதம் பம்பலப்பிட்டி இரவு விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த மதுபான போத்தல்களை அழிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மதுபான இருப்பை நீதவான் முன்னிலையில் அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில், இதன்போது நடத்தப்பட்ட சோதனையில் பல போத்தல்களில் மதுபானத்திற்குப் பதிலாக ஒரு மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன்படி, அவற்றை அழிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டதோடு, நீதிமன்ற களஞ்சிய அறையில் மதுபான போத்தல்கள் சேமித்து வைக்கப்பட்டு, இது குறித்து வாழைத்தோட்ட பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பின்னர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பிரிவு நேற்று தொடர்புடைய மதுபான போத்தல்களை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவானிடம் கோரியது.

இதற்கு அனுமதி அளித்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, மதுபானத்திற்கு பதிலாக மாற்றுப் பொருள் எவ்வாறு சேர்க்கப்பட்டது எவ்வாறு என்பது குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version