இலங்கை
தென்னிலங்கையில் பயங்கரம்; யுவதி வெட்டிக்கொலை

தென்னிலங்கையில் பயங்கரம்; யுவதி வெட்டிக்கொலை
தென்னிலங்கையில் காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் 22 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
காணித் தகராற்றில் உறவினர்களுக்கிடையிலே வாள்வெட்டு இடம்பெற்றது. இதில் சிக்கியே மேற்படி யுவதி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளம் யுவதியும். அவரின் தந்தையும், சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி யுவதி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், மேற்படி சம்பவம் குறித்து உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.