பொழுதுபோக்கு
நான் பைத்தியம், சைக்கோ மாதிரி பண்ணுவேன்; அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு: நடிகை ரிஹானா!

நான் பைத்தியம், சைக்கோ மாதிரி பண்ணுவேன்; அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு: நடிகை ரிஹானா!
சீரியல் நடிகை ரிஹானா விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வரும் ரிஹானா புதிய தகவல்களையும், பண மோசடி செய்துவிட்டார் என்று கூறிய, ராஜ் கண்ணன் குறித்து பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்.சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், கணவரை பிரிந்த இவர் தனியாக தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் ராஜ் கண்ணன் என்பவர் ரிஹானா தன்னை மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தன்னை 2-வது திருமணம் செய்துகொண்டு, வீடு வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரிஹானா அவர் தொழிலதிபர் அல்ல, டிவி சேனலில் தொழிலதிபர் என்று சொன்னதால், கழுத்தில் ஒரு பெரிய செயின் போட்டுக்கொண்டு, பந்தா காட்டி வருவதாக கூறி வருகிறார். மேலும், ராஜ் கண்ணன் மீது ரிஹானா வைத்து வரும் குற்றச்சாட்டுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது வாவ் தமிழா யுடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அவனிடம் பணம் கொடுத்துவிட்டேன். அதை எப்படி வாங்க வேண்டும் என்று தெரியாமல் பல நாட்கள் கஷ்டப்பட்டேன். ஒரு வழியாக அவனிடம் கெஞ்சி பணத்தை வாங்கிவிட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக்கொண்டால் என் பணம் நம் பணம் என்று ஆகிவிடும் அதனால் தான், கல்யாணம் செய்தது. கடந்த ஒன்றரை வருடமாக அவனிடம் பேசும்போது காசைப்பற்றி மட்டும் தான் பேசினேன்.பணத்தை மறந்து வேறு ஏதாவது பேச முயன்றால் நான் சைக்கோ தனமான நடந்துகொள்வேன். பைத்தியம் மாதிரி ஆகிவிடுவேன். எப்படியெல்லாம் அவனிடம் மல்டிப்பிள் கேரக்டர காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டி நடித்துக்கொண்டிருந்தேன். இதை பற்றி எங்க அம்மாவிடமும் சொல்லி வைத்திருந்தேன். நான் ஸ்கிரிப்ட் போட்டு பேசவில்லை. அவன் தான் அவ்வாறு பேசுகிறான். கல்யாணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் பெண்களை டார்க்கெட் செய்கிறான்.அதேபோல் ஷெரின் என்ற ஒரு பெண், இவரிடம் நீ ரொம்ப நல்லவன், என்னை யூஸ் வேணா பண்ணிக்கோ, உன்னுடன் கமிட் ஆக முடியாது. உனக்கு துரோகம் பண்ண எனக்கு மனசு வரவில்லை என்று கூறியதாக என்னிடம் சொன்னான். அதேபோல் என்னை கேவலப்படுத்துவது மட்டுமே அவனது எண்ணம். அவனை எந்த பொண்ணும் விரும்பாது. இப்போ ரிதன்யா ஒரு விஷயம் பண்ணாங்க, அவங்க மாதிரியான பெண்ணாக இருக்கட்டும், கணவர் இல்லாத சிங்கிள் பேரண்டாக இருக்கும் பெண்ணாக இருக்கட்டும்,இந்த மாதிரி, சாக்கடை, பொறுக்கிகள் லைஃபில் வந்துவிட்டு போய்விடுவார்கள்.அதனால் ஏற்படும் பிரச்னைகளில், என்னை மாதிரி பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி பிரச்னைகள் வரும் என்றுதான் அவன் பேசிய ஆடியோ அனைத்தும் இன்னும் டெலிட் செய்யாமல் வைத்திருக்கிறேன். எல்லா ஃபுருப்பும் இருக்கு. நான் மோசடி செய்யவில்லை. கல்யாண ஆசை காமிக்கவில்லை. எனக்கு தெரியாமல் தான் அவன் மோசடி செய்தான் என்பதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இன்றைக்கு வனிதா விஜயகுமார், கஷ்டப்பட்டு, பிள்ளையை வளர்த்து, அந்த பெண்ணை ஒரு தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறார்.இன்றைக்கு வனிதாவின் படம் வெளியாகி, திரையில் ஓடும்போது, ஆனந்த கண்ணீர் வருகிறது. அந்த வலி, சிங்கிள் பேரண்டாக இருக்கும் அனைவருக்கும் தெரியும். வனிதா விஜயகுமார் இன்றைக்கு அனைவருக்கும் தெரிந்தவர். அவர் இப்படி வாழ்வதற்கு அவரின் கடின உழைப்புதான் காரணம் என்று கூறியுள்ளார்.