இலங்கை
நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து அதிரடியாக நீக்கம்

நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து அதிரடியாக நீக்கம்
ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்புகளை அறிந்திருந்தும் மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை (SIS) தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அவரை பணிநீக்கம் செய்ய தொடர்புடைய உத்தரவுகளை பிறப்பிக்க பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு பணிப்புரையை அனுப்பியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, நிலந்த ஜெயவர்தன தனது கடமையை புறக்கணித்ததாகவும், குற்றவியல் குற்றத்தைச் செய்ததாகவும் பரிந்துரைத்திருந்தது.
அதன்படி, அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர் செய்த குற்றச் செயலுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.