சினிமா
பாக்ஸ் ஆபிசில் Flop-ஆன “பன் பட்டர் ஜாம்”.! முதல் நாளே இப்டியா.? சோகத்தில் ரசிகர்கள்.!

பாக்ஸ் ஆபிசில் Flop-ஆன “பன் பட்டர் ஜாம்”.! முதல் நாளே இப்டியா.? சோகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதுமையான முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், பிக் பாஸ் பிரபலம் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்” நேற்று (ஜூலை 18) திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படமாக இப்படம் வரவேற்கப்பட்டது. ஆனால் முதல் நாள் வசூல் அறிக்கையால் காமெடியை சார்ந்த இந்த சிறிய படத்திற்கு ஒரு பதட்டம் ஏற்பட்டுள்ளது.ராஜு கதாநாயகனாக நடித்த இப்படத்தை இயக்குநர் ராகவ் மிர்ததின் இயக்கியுள்ளார். காதல் நகைச்சுவை கலந்து உருவாகி வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அத்தகைய படம் வெளியான முதல் நாள் 50 லட்சத்தை விட குறைவாகவே வசூல் செய்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ராஜு ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சிலர் இனி வரும் நாட்களில் இப்படம் அதிகளவான வசூலை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.