பொழுதுபோக்கு
பொங்கலுக்கு பூஸ்ட்டா? என்ன காமினேஷன் இது? விஜய் சேதுபதியின் வித்தியாசமான உணவு: மைனா உடைத்த உண்மை!

பொங்கலுக்கு பூஸ்ட்டா? என்ன காமினேஷன் இது? விஜய் சேதுபதியின் வித்தியாசமான உணவு: மைனா உடைத்த உண்மை!
விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் தயாராகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி குறித்து உண்மையை உடைத்துள்ளார் நடிகை மைனா.பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெரினா, கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில், தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி என்ற படத்தை இயக்கியுள்ளார். நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், தீபா, யோகி பாபு, மைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையைமத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள என்னடி சித்திரமே பாடல், பலரின் ரிங்மோனாக மாறியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஜூலை 25-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவின் மூலம் படத்திற்கு பெரிய ப்ரமோஷன் கிடைத்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.இதனிடையே இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை மைனா விஜய் சேதுபதி உணவு குறித்து முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, விஜய் சேதுபதியுடன் நடிக்கப்போவது குறித்து மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பின்போது எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதையும் மீறி படப்பிடிப்புக்கு போனபோது, என்னை திட்டிவிட்டார். நீ எதற்றாக வந்தே, இப்போ இல்லான அப்புறம் இந்த காட்சியை எடுத்திருப்பேன் என்று இயக்குனர் சொன்னார்.அதன்பிறகு நடித்து முடித்துவிட்டு வந்தேன். படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியை எல்லோரும் ஹீரோ என்று நினைத்தார்கள். ஆனால் அவர் எங்களுக்கு ஸ்னாக்ஸ் சப்ளையர். பொங்கலில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் கலந்து சாப்பிட்டு இருக்கீங்களா? அவர் என்னை சாப்பிட சொன்னார். நானும் ஹீரோதானே சாப்பிட சொல்கிறார் என்று சாப்பிட்டுவிட்டு சார் சூப்பரா இருக்கு சார் என்று சொன்னேன். அதேபோல், படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அவரது டீம் வெறும் கையுடன் வந்ததே கிடையாது. 5 ஸ்டார் ஹோட்டலில் அவருக்கு கொடுக்கும் டிபனை இங்கு வந்து எங்களுக்கு கொடுப்பார்.இந்த படத்தின் படப்பிடிப்பில், என்னையும் தீபா அக்காவையும் அவர் தத்தெடுத்துக்கொண்டார். அவர் உணவு பையை எடுத்து வரும்போது நாங்கள் பக்கத்தில் செல்வோம். அப்போது அவர் தீபா அக்காவிடம் சாப்பிடுறீங்களா என்று கேட்பார். இவரும் குடுயா சாப்பிடுறோம் என்று சொல்வார். உடனே நாங்கள் சாப்பிட தொடங்கிவிடுவோம் என்று காமெடியாக பேசியுள்ளார்.