சினிமா
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த வனிதா

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த வனிதா
வனிதா பிலிம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் கடந்த ஜூலை 11ஆம் திகதி வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.குறித்த படத்தில் வனிதா விஜயகுமாருடன், ராபர்ட், செப் தாமு, கிரண், மாஸ்டர் கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன்,உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இது இவ்வாறு இருக்க குறித்த திரைப்படத்தில் வனிதா, குட்டையான ட்ரவுர், இறுக்கமான மேலாடையும் அணிந்து, தனது உடலமைப்பு எடுப்பாகத் தெரியும் படி கவர்ச்சியை வாரி இறைத்து பல காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. அதுமாத்திரமன்றி குறித்த திரைப்படத்தில் கவர்ச்சிக் காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு விமர்சனத்தில், படம் நகைச்சுவையாக இருந்தாலும், சில இடங்களில் தடுமாறி சிதறிவிடுகிறது என்றும் வனிதாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.’குழந்தை வேண்டாம்’ என்று விடாப்பிடியாக இருக்கும் ராபர்ட்.. நினைத்ததை நடத்திட துடிக்கும் வனிதா. குழந்தை பேறு அடைவதற்கான வனிதாவின் முயற்சி நிறைவேறியதா? குழந்தை வேண்டாம் என்று ராபர்ட் சொல்வது ஏன்? கடைசியில் என்ன ஆனது? என்பதே மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் கதை.எனவே வனிதாவின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் செம விருந்தாக அமைந்துள்ளதாகவும் சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.