இலங்கை
வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த நபர்
வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த நபர்
வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
சதீஷ் என்பவரின் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டு நபரைப் பார்த்துக் குரைத்ததனால் குறித்த நபர் நாயைத் திட்டியுள்ளார்.
இதைப் பார்த்த நாயின் உரிமையாளர் சதீஷ், அவரது சகோதரர்களுடன் சேர்ந்து குறித்த நபரின் வீட்டுக்குச் சென்று அவரை அடித்துள்ளனர்.
அத்துடன் கூர்மையான ஆயுதத்தால் தேவேந்திராவின் மூக்கையும் அறுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாயின் உரிமையாளரையும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர்.