இலங்கை
வீதியால் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்
வீதியால் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்
உறவினரின் வீட்டுக்கு வீதியால் நடந்து சென்ற சிறுவனைப் பின்னால் வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.