Connect with us

வணிகம்

Today Gold Rate, 19 July: மீண்டும் ரூ.73,000-ஐ தாண்டிய தங்கம் விலை; 3-வது நாளாக விலை உயர்வு!

Published

on

Gold and Silver Price Today in Chennai

Loading

Today Gold Rate, 19 July: மீண்டும் ரூ.73,000-ஐ தாண்டிய தங்கம் விலை; 3-வது நாளாக விலை உயர்வு!

Gold and Silver Price Today in Chennai: இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக அவ்வப்போது உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கடந்த ஜூன் 14-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,320-க்கும், சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையாகி சாதனை படைத்தது. அதன்பிறகு ஜூன் 21 ஆம் தேதி முதல் தங்கம் விலை சரிவைச் சந்தித்தது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து விற்பனையானது. ஜூலை 14 ஆம் தேதி, சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.73,240-க்கும், கிராம் ரூ.9,115-க்கும் விற்பனையானது. ஜூலை 15 சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜூலை 16 தங்கம் விலை குறைந்து, சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (ஜூலை 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 19) சவரனுக்கு ரூ.ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து ரூ.9,170-க்கு விற்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன