சினிமா

அறையில் ரோகிணியுடன் , கிரிஷ் பேசும் சத்தம் மீனாவின் அதிர்ச்சி…!சீரியலில் பரபரப்புபுரொமோ!

Published

on

அறையில் ரோகிணியுடன் , கிரிஷ் பேசும் சத்தம் மீனாவின் அதிர்ச்சி…!சீரியலில் பரபரப்புபுரொமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களின் மனதை வென்ற ‘சிறகடிகை ஆசை’ சீரியலில் திருப்பங்கள் நிறைந்த  புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கதையின் முக்கியமான திருப்பங்களை வெளிப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.முத்து, கிரிஷை வீட்டிற்கு அழைத்து வரும் காட்சியால் தொடங்கும் புரொமோவில், விஜயா அவரை கடுமையாக கேள்வி கேட்க, “யாரு எவன்னு தெரியாத புள்ளைய கூட்டிட்டு வந்து இருக்க, இது என்ன சத்திரமா?” என கூறுகிறார். அதற்கு முத்து, “அப்பா, அவங்கள பாருப்பா… நான் கூப்பிட்டு வந்துட்டேன்” என பதிலளிக்கிறார்.அதையடுத்து, கிரிஷ் ரோகிணியிடம், “அம்மா உன்னை பாக்கணும்னு தோணுச்சு… உன் பக்கத்துலயே நான் படுத்துக்கிட்டா…” என உணர்ச்சிப்பூர்வமாக பேச, ரோகிணி தனது உணர்வுகளை தடுத்து வைத்து, “நான்தான் உன் அம்மான்னு மட்டும் சொல்லவே கூடாது” என கடுமையாக பதிலளிக்கிறார். இனிமேல் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த புரொமோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version