தொழில்நுட்பம்
ஃபிரிட்ஜ் மட்டும் இல்லை, உங்க அசிஸ்டெண்ட்: உணவுப் பொருட்களைக் கண்காணித்து, ஆர்டர் செய்யும் ஸ்மார்ட் ஃபிரிட்ஜ்கள்!

ஃபிரிட்ஜ் மட்டும் இல்லை, உங்க அசிஸ்டெண்ட்: உணவுப் பொருட்களைக் கண்காணித்து, ஆர்டர் செய்யும் ஸ்மார்ட் ஃபிரிட்ஜ்கள்!
ஸ்மார்ட் ஹோம்கள் இனி எதிர்காலக் கனவு மட்டுமல்ல, இன்றைய நிஜம். வீட்டை விட்டு வெளியே இருந்தாலும், உங்கள் வீட்டு உபயோகப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு அமைப்புகளை நிர்வகிப்பது, மின்சார சிக்கனத்தை உறுதி செய்வது எனப் பல வசதிகளை ஸ்மார்ட் தொழில்நுட்பம் சாத்தியமாக்கி உள்ளது. இந்தத் தொழில்நுட்பங்கள் நம் அன்றாட வாழ்க்கையை இன்னும் சுலபமாக்குகின்றன.இந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட் குளிர்சாதனப் பெட்டிகள் (Smart Refrigerators) ஒருபடி மேலே சென்றுள்ளன. இந்த ஃபிரிட்ஜ்கள் வெறும் குளிர்ப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் வீட்டு சமையலறையின் ‘மேலாளர்’ போல செயல்படுகின்றன. எப்படி என்று பார்ப்போமா?இந்த ஸ்மார்ட் ஃபிரிட்ஜ்கள் உள்ளே இருக்கும் உணவுப் பொருட்களைத் தானாகவே கண்காணிக்கும். ஃபிரிட்ஜில் என்ன இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்பது இவற்றுக்குத் தெரியும். இது மட்டுமல்லாமல், ஒரு உணவுப் பொருள் காலாவதியாகப் போகிறது என்றால், இந்த ஃபிரிட்ஜ் உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும். இனிமேல் கெட்டுப்போன பொருட்களைக் கஷ்டப்பட்டு தூக்கிப் போட வேண்டியதில்லை. உணவு வீணாவதும் வெகுவாகக் குறையும்.இதுதான் இந்த ஸ்மார்ட் ஃபிரிட்ஜ்களின் சிறப்பம்சம், பால் தீர்ந்துவிட்டதா? முட்டை இல்லையா? ஃபிரிட்ஜே இந்த பொருட்களை தானாகவே கண்டறிந்து, உங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஆன்லைன் ஸ்டோர்களில் ஆர்டர் செய்ய உதவும். சில மாடல்களில், நீங்கள் ஒரு பட்டனை அழுத்தினால் போதும், ஆர்டர் செய்யப்பட்டு உங்கள் வீட்டிற்கே பொருட்கள் வந்துசேரும்.இந்த மாதிரியான ஸ்மார்ட் குளிர்சாதனப் பெட்டிகள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், உணவுப் பொருட்கள் வீணாவதை குறைக்கும். இதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும். உங்கள் சமையலறை மேலும் ஒழுங்கமைக்கப்பட்டதாக இருக்கும். தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எவ்வளவு ஸ்மார்ட்டாக மாற்றுகிறது பார்த்தீர்களா?