சினிமா
அரசியல் வாதியை சந்தித்த நடிகர் துல்கர் சல்மான்.! எதற்காகத் தெரியுமா.?

அரசியல் வாதியை சந்தித்த நடிகர் துல்கர் சல்மான்.! எதற்காகத் தெரியுமா.?
மலையாள சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோ எனப் பல முகங்கள் கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான். அவரது செயல்கள் எப்போதும் பாராட்டத்தக்க வகையில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.அந்த வகையில், இப்போது அவர் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்திருப்பது, சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படும் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.துல்கர் சல்மான் தனது புதிய தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுடன், முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து மரியாதை நிமித்தமாக கை குலுக்கியுள்ளார்.அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.புகைப்படங்களில், முதல்வர் மற்றும் துல்கர் இருவருமே வெகு நேரம் நின்று உரையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.