Connect with us

இலங்கை

அவலமிக்க முடிவு ; 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் உயிர் மாய்ப்பு

Published

on

Loading

அவலமிக்க முடிவு ; 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் உயிர் மாய்ப்பு

இந்தியாவில் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில், 3 குழந்தைகளைக் கொன்று, பெற்றோரும் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தம்பதியினர் மற்றும் அவர்களது 3 குழந்தைகளின் உடலங்களும் அவர்களது வீட்டில் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

அதைத் தொடர்ந்து, குறித்த 5 பேரின் உடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தொல்லை காரணமாக உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சினை தான் இவர்களின் உயிர் மாய்ப்புக்குக் காரணமா என, பல்வேறு கோணத்தில் அஹ்மதாபாத் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தற்சமயம் நாளுக்கு நாள் உயிர் மாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

Advertisement

கடன் பிரச்சினைகள், தனிமை, வாழ்க்கையில் முன்னேற்றமில்லை எனப் பல காரணங்கள் இந்த உயிர் மாய்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன.

ஆனால், எந்தவொரு பிரச்சினைக்குமே உயிர் மாய்ப்பு ஒரு தீர்வாகாது.

ஒரு பிரச்சினையிலிருந்து வெளியில் வருவதற்கு உயிர் மாய்ப்பு என்றுமே ஒரு தீர்வல்ல, அது கோழைத்தனத்தின் உச்சக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

உயிர் மாய்ப்புகள் தடுக்க முடியாத ஒன்றல்ல.

உயிர் மாய்ப்பினால் அனைத்து பிரச்சினையும் முடிந்துவிடுமென ஒருபோதும் எண்ணி விடக் கூடாது.

அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பமாகக் கூட இருக்கலாம்.

Advertisement

எனவே, முடியுமானவரை உயிர் மாய்ப்பு முயற்சிகளைக் கைவிட வேண்டும்.

அவ்வாறு உயிர் மாய்ப்பு சம்பந்தமாக மனம் சிந்திக்க ஆரம்பிக்கத் தொடங்கினால் நெருங்கிய யாருடனாவது மனது விட்டுப் பேச வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன