இலங்கை
இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழப்பு!

இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழப்பு!
நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல – கிரிஉல்ல வீதியில் நேற்று சனிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கரொன்று வீதியை விட்டு விலகி வலது பக்கத்தின் எதிர் திசையில் பயணித்த பஸ் ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் மஹாவ, திவுல்லாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய காரின் சாரதியும், 9 மாதங்கள் மற்றும் 11 மாதங்களுடைய இரண்டு பெண்குழந்தைகளும் அடங்குவர்.
விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வெல்லவ பொலிஸ் பிரிவின் வாரியப்பொல – கும்புக்கெடே வீதியில் சென்ற லொறி பாதாரசி ஒருவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனேவத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.