இலங்கை
இலங்கையில் சீன பிரஜை செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் மடக்கி பிடித்த பொலிஸார்

இலங்கையில் சீன பிரஜை செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் மடக்கி பிடித்த பொலிஸார்
உரிய கட்டணங்களை செலுத்தாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜையொருவர் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 600 சிகரெட்டுகளை அதிகாரிகள் அவரது உடைமையில் இருந்து கண்டுபிடித்துள்ளதுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சீன பிரஜையை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.