இலங்கை
கிளிநொச்சியில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி!
கிளிநொச்சியில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி!
கிளிநொச்சிமாவட்ட சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்தப் போட்டியில் இம்முறை பாடசாலை மாணவர்களுக்கான போட்டியும் சேர்கப்பட்டிருந்தது.
தமது தந்தையின் தினைவாக அவரது பிள்ளைகள் இந்த போட்டியை மூன்றுவருடங்களாக மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடாத்தி வருகின்றனர்.
அமரரின் மூத்த மகன் கிறிஸ்ரிரூபன் இதற்காக மிகப்பெரும் பங்காற்றி வருகிறார் தமது குடும்பத்தின் சொந்த நிதிப்பங்களிப்பில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவது சமூகம்மீதான அக்கறைக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கிவிப்பதற்கும் அவர்கள் வழங்கும் மிகப் பெரிய பங்களிப்பின் அடையாளமாகும்.
எமது கல்லூரியில் இருந்து ஆண் பெண் அணிகள் பங்கு கொண்டிருந்தனர்.
ஆண்களுக்கு 24 KM ஓட்டமும்,
பெண்களுக்கு 18KM ஓட்டமும் நடாத்தப்பட்டது.
ஆண்களுக்கானபோட்டியில்
முதலாம்,இரண்டாம் இடங்களை முருகானந்தா கல்லூரி மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
பெண்களுக்கானபோட்டியில்
முதலாம்இடத்தினை
முருகானந்தா கல்லூரி மாணவி பெற்றுக் கொண்டார். இது முருகானந்தா கல்லூரியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்
1ஆம் இடம் செல்வன் கேனுசன் 20,000/-
2ஆம் இடம் செல்வன் ஈசாபர்ஷன் 15,000/-
1ஆம் இடம் செல்வி மிதுசாயினி 20,000/-
பணப்பரிசில் மற்றும் பதக்கங்கள்,வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாடசாலை அணிகளுக்கான வெற்றியில்
முருகானந்தாகல்லூரி ஆண்,பெண் அணிகள்
முதலாம்இடத்தினைப் பெற்றுக் கொண்டன.
இதற்காக தலா 50,000/- பணப்பரிசிலைப் பெற்றுக் கொண்டனர்..
அகஸ்ரின் ஞாபகார்த்த சைக்கிளோட்டப் போட்டி முருகானந்தாகல்லூரிக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை