பொழுதுபோக்கு
சந்திரமுகி ஜோதிகா கேரக்டரில் நடிக்க இருந்தவர் சிம்ரனா? 3 நாள் ஷுட்டிங் நடந்து விலகிட்டாராம்: ஏன் தெரியுமா?

சந்திரமுகி ஜோதிகா கேரக்டரில் நடிக்க இருந்தவர் சிம்ரனா? 3 நாள் ஷுட்டிங் நடந்து விலகிட்டாராம்: ஏன் தெரியுமா?
சந்திரமுகி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். பி. வாசு இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை சிம்ரன் நடிக்க இருந்தாராம். இது குறித்து அவரே சினிமா விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.சந்திரமுகி படம் வெளியான சமயத்தில், ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன் தான் நடிக்க இருந்தார் என்றும், மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கூட அவர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இது உண்மையா என்று கேட்டபோது, “ஆமாம், அது உண்மைதான்” என்று சிம்ரன் உறுதிப்படுத்தினார். சந்திரமுகி படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில் சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால், அவரால் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதாம்.இது குறித்து அவர் கூறுகையில், “நான் குடும்பத்துடன் இருந்ததால், அந்த படத்திலிருந்து விலக வேண்டியிருந்தது. எங்கள் தயாரிப்பாளர் கூட எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் என் மீது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதனால், ரஜினி சாருடன் பணிபுரியும் வாய்ப்பை நான் இழந்தேன்.” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.இருப்பினும், ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்பு 2017 ஆம் ஆண்டு சிம்ரனுக்கு மீண்டும் கிடைத்தது. தனது பிறந்தநாளில் ஒரு சர்ப்ரைஸ் செய்தியாக, “சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம்” என்று ஒரு மெசேஜ் வந்ததாம். முதலில் அது ஒரு பிராங்க் மெசேஜ் என்று நினைத்த சிம்ரன், போன் செய்து விசாரித்தபோது, அது கார்த்திக் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பாளர் என்றும், பேட்ட படத்திற்காக தன்னை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிய வந்ததாம்.”நீங்கள் ஜோக் செய்கிறீர்களா அல்லது இது சீரியஸா?” என்று கேட்டபோது, “இல்லை மேடம், நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம்” என்று பதிலளித்தார்களாம். 2018 ஆம் ஆண்டு பேட்ட திரைப்படத்தில் ரஜினி சாருடன் முதல் முறையாக இணைந்து நடித்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் என்றும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிம்ரன் கூறினார்.