Connect with us

இலங்கை

தமிழிச்சிக்காக வாதாடிய சிங்களத்தி – சிங்கப்பெண் அல்ல சிங்கிள் பெண்

Published

on

Loading

தமிழிச்சிக்காக வாதாடிய சிங்களத்தி – சிங்கப்பெண் அல்ல சிங்கிள் பெண்

வெள்ளைச் சிறகடிக்கும் வெண்புறாக்களை இலங்கையில் பறக்க விட்ட இரும்புப்பெண்மணி என்ற பெயருடன் பதவியேற்ற ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு கிருஷாந்தியின் விடயம் நேரடியாக மனித உரிமை ஆர்வலரும் வக்கீலுமான திரு.பூபாலன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது அழுத்தமாகிப்போகிறது.

இராணுவம் மீது நடவடிக்கை எடுத்து இராணுவத்தை பகைக்க முடியாது என்ற மனநிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்ததும் , சட்டமா அதிபரிற்கு அழைப்பை எடுத்து கட்டளை பிறப்பிக்கிறார் ஜனாதிபதி.

Advertisement

கிருஷாந்தி மற்றும் மூவர் காணாமல் போனதை விசாரிக்கும் வழக்கு புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

யுத்த காலம் , யாழ்ப்பாணத்துக்கு போவது ஆபத்தான நேரம் அது.

அப்போது சட்டமா அதிபர் சார்பாக வழக்கை விசாரிக்கும் பொறுப்பை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று துணிச்சலுடன் ஏற்றுக்கொள்கிறார் ஒரு இளம் பெண் சட்டத்தரணி பிரசாந்தி மகேந்திரரத்ன.

Advertisement

இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் போகிறார் பிரசாந்தி.

எப்படியாவது என்ன நடந்தது என்று கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் யாழ்ப்பாணத்தில் காலடி வைக்கிறார் பிரசாந்தி.

யாழ்ப்பாண நீதவான் முன் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. புதைக்கப்பட்ட இடமோ சகதியான இடம். புதைக்கப்பட்டு 45 நாட்களாகிவிட்டன. 

Advertisement

இப்போது பிரசாந்தி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் முன் இரண்டு முக்கிய சிக்கல்கள்!

1. சிதைவடைந்த நிலையில் தோண்டியெடுக்கப்பட்ட உடல்களை காணாமல் போனவர்களினது உடல்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

2. கிருசாந்தி வன்புணர்வு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்கவேண்டும். 

Advertisement

இராணுவம் கொடுத்த வாக்குமூலத்தை மட்டும் வைத்து அதை நிரூபிக்க முடியாது. வன்புணர்வை நிரூபிக்காது விட்டால் பெரியளவில் தண்டனை கிடைக்காது.

அரசும் சிங்களவர்களும் விரைவாக இந்த வழக்கை முடிக்க இவரைக் கட்டாயப்படுத்தியது.

“போராடுபவர்களை காட்டி கொடுத்த துரோகி பிரசாந்தி” என்றும் அவர்களுடைய யுத்த வீரர்களை காட்டிக்கொடுத்தவள் என்றும் பிரசாந்தி மீது வசைபாடல்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

Advertisement

இதையெல்லாம் மீறி ஒரு சிறுபான்மையினத்து பெண்ணுக்கு நீதி கிடைக்க பாடுபட்ட இவரால் நீதிதேவதை பெரிதும் மகிழ்ந்திருப்பாள்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1753045777.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன