இலங்கை

திடீரென ஒரு பகுதியில் முடி உதிர்வா? முடி வளர்ச்சிக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்கள்

Published

on

திடீரென ஒரு பகுதியில் முடி உதிர்வா? முடி வளர்ச்சிக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்கள்

அலோபீசியா அரேட்டா என்பது திடீர் முடி உதிர்வை ஏற்படுத்தும் ஒரு வகை தலையணை நோயாகும். இது ஒரே இடத்தில் சுற்றாக முடி உதிர்தல், சில நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கான முடி இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். மரபணு, மன அழுத்தம், அல்லது நோய் எதிர்ப்பு மண்டல பிரச்சினைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

 சிகிச்சையுடன் நீங்கள் சில இயற்கை முறை வீட்டு வைத்தியமும் பின்பற்றும் போது நீங்கள் முடி வளர்ச்சியை பெறலாம். அப்படியான வீட்டு வைத்தியங்கள் என்ன என்பது பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.

Advertisement

தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையை சுத்தம் செய்வதற்கு உதவுகின்றன. இது முடி நுண்ணறை துளைகளை அடைத்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிறது.

எலுமிச்சை வைட்டமின் சி கொண்ட இவை தொற்று எதிர்த்து போராட உதவுகிறது.

தேன் – அரை டீஸ்பூன்

Advertisement

எலுமிச்சை – நீர்த்தது அரை டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக கலந்து உச்சந்தலையில் பாதிக்கபட்ட இடத்தில் மென்மையாக தேய்த்து தலைக்கு
குளிக்கவும்.

​கூந்தல் வளர்ச்சிக்கும் கூந்தல் உதிர்வு தடுக்கவும் வெங்காயச்சாறு உதவும். இதில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச்சியை ஆதரிக்கின்றன. இது ஃப்ரீரேடிக்கல் சேதத்தை எதிர்த்து போராடுவதால் உச்சந்தலை இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. மேலும் எந்த வகையான தொற்றுகளையும் தடுக்க செய்கிறது.

Advertisement

வெங்காயத்தை நறுக்கி நீர்விடாமல் மிக்ஸியில் அரைத்து அதன் சாறை திட்டு திட்டாக முடி இல்லாமல் இருக்கும் இடத்தில் தடவி விடவும். பிறகு 40 நிமிடங்கள் கழித்து கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசவும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version