இந்தியா
திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியா்கள் 4 போ் பணி இடைநீக்கம்: தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியா்கள் 4 போ் பணி இடைநீக்கம்: தேவஸ்தானம் நடவடிக்கை
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் என்றும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 4 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்:பி. எலிசர் – துணைச் செயல் பொறியாளர் (தரக் கட்டுப்பாடு)எஸ். ரோஸி – BIRRD மருத்துவமனை செவிலியர்எம். பிரேமாவதி – BIRRD மருத்துவமனை, தரம்-1 மருந்தாளர்டாக்டர் அசுந்தா – எஸ்.வி. ஆயுர்வேத பார்மசிஇந்த ஊழியர்கள் இந்து மத நிறுவனத்தில் பணிபுரியும்போதும், அதை பிரதிநிதித்துவப்படுத்தும்போதும், நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறி, பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிக்கையில் தெரிவித்துள்ளது. TTD விழிப்புணர்வுத் துறை அளித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, விதிகளின்படி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.பிற மதத்தினர் மீது தொடரும் நடவடிக்கை:திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பிற மதங்களைச் சேர்ந்த அதிகாரிகளை இடமாற்றம் அல்லது சஸ்பெண்ட் செய்யும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சஸ்பென்ஷன்கள் அமைந்துள்ளன. கடந்த ஜூலை 8 அன்று, உதவிச் செயல் அதிகாரி ஏ. ராஜசேகர் பாபு என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டது. TTD வட்டாரங்களின்படி, TTD வாரியம், குறிப்பாக அது நிர்வகிக்கும் கோயில்களில், இந்துக்கள் அல்லாத எவரையும் பணியாற்ற அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான NDA அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, TTD-யில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த பல இந்துக்கள் அல்லாத ஊழியர்களை TTD இடமாற்றம் செய்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில், இந்துக்கள் அல்லாத மத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 18 ஊழியர்களை இடமாற்றம் செய்தது. இதில் 6 ஆசிரியர்கள், ஒரு துணைச் செயல் அதிகாரி, உதவிச் செயல் அதிகாரி, உதவி தொழில்நுட்ப அதிகாரி, விடுதி ஊழியர், 2 எலக்ட்ரீஷியன்கள் மற்றும் 2 செவிலியர்கள் ஆகியோர் அடங்குவர்.கடந்த நவம்பர் 18 அன்று, புதிய தலைவர் பி.ஆர். நாயுடு தலைமையில் நடைபெற்ற TTD-யின் முதல் கூட்டத்திலேயே, இந்துகள் அல்லாதவர்களை இடமாற்றம் செய்யவும், அதன் வளாகத்தில் அரசியல் பேச்சுகளுக்கு தடை விதிக்கவும் வாரியம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.