சினிமா
பாலிவுட் நடிகரை காதலிக்கிறாரா ஸ்ரீலீலா.. கிசுகிசுக்கு நடிகை கொடுத்த விளக்கம்

பாலிவுட் நடிகரை காதலிக்கிறாரா ஸ்ரீலீலா.. கிசுகிசுக்கு நடிகை கொடுத்த விளக்கம்
இந்திய சினிமாவில் இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் ஸ்ரீலீலா. இவருடைய நடிப்பை தாண்டி நடனந்தை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். புஷ்பா 2 திரைப்படத்தில் சிறப்பு பாடலுக்கு இவர் நடனமாடியது படுவைரலானது.அதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த ஜூனியர் திரைப்படத்தில் வைரல் என்கிற பாடலுக்கு கிளாமராக நடனமாடியிருந்தார். இதற்காக கடுமையான விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இளம் நடிகை ஸ்ரீலீலா பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசு செய்திகள் இணையத்தில் உலா வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு படம் நடித்து வருகிறார்கள். இதற்கிடையில் இப்படி ஒரு தகவல் வைரலாகி வருகிறது.இந்த நிலையில், ஸ்ரீலீலா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் தான் யாரையும் தற்போது காதலிக்கவில்லை என்றும் இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் தான் எங்கு சென்றாலும் அம்மா என்னுடன் தான் வருகிறார். அப்போது நான் எப்படி காதலில் விழ முடியும் என்றும் அவர் கேட்டுள்ளார். இதன்மூலம் காதல் கிசுகிசு செய்திகளுக்கு ஸ்ரீலீலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.