இலங்கை
புயலில் சிக்கி படகுடன் இரு மீனவர்கள் மாயம்!

புயலில் சிக்கி படகுடன் இரு மீனவர்கள் மாயம்!
சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி படகுகளில் ஒரு படகு மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது.
பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதுடன், அதில் இரண்டு மீனவர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மீதமுள்ள இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
சிலாபம் வெல்ல கொலனி பகுதியை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இந்த மூன்று மீன்பிடி படகும் சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்றுள்ள நிலையில், காணாமல் போன படகில் இருந்த இரண்டு மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், விமானப்படையின் பெல் 12 ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள விமானப்படை நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், படகு மற்றும் இரண்டு மீனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.