இலங்கை
பொலிஸாரின் சோதனையில் சட்டவிரோத ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் கைது!

பொலிஸாரின் சோதனையில் சட்டவிரோத ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் கைது!
மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேபட பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் ஒருவர்நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் வண்டியை சோதனையிட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.