இலங்கை

மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த விமானி அனுஜன்!

Published

on

மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த விமானி அனுஜன்!

மன்னார் விடத்தல் தீவு கிராமத்தின் அருள்வாசகம் பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ஆகியோரின் புதல்வனுமாகிய அனுஜன்  விமானியாக விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.

9/3/1998 ம் ஆண்டு பிறந்த அனுஜன்  தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.

Advertisement

தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் ஸ்பெயினின் பர்கோஸ் நகரில் உள்ள FLYBY AVIATION ACADEMY யில் இணைந்து ATPL ஒருங்கிணைந்த பாடநெறியில் அனைத்து அதிகாரப்பூர்வ ATPL தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ATPL என்பது யாதெனில் ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமமாகும். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிகமான தரமான உரிமமாக இருப்பதுடன் இவ் உரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது.

Advertisement

மிகவும் தரம் வாய்ந்த விமானியாக அங்கீகாரம் பெற்றுள்ள அனுஜன் அவர்களுக்கு மன்னார்சமூகம்சார்ந்த பாராட்டுகள்குவிந்துவருகிறது .

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version