சினிமா
முத்துக்குமாருக்கு செய்தது உதவி இல்ல.. அது நன்றிக்கடன்! SKன் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்
முத்துக்குமாருக்கு செய்தது உதவி இல்ல.. அது நன்றிக்கடன்! SKன் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்
தமிழ் திரைப்பட பாடல்களில் அழுத்தமான அர்த்தங்களையும், உயிரோட்டமான உரைகளையும் கொண்டுவரும் வல்லுநராக வலம் வந்தவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். அவரது 50வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் நேற்று மாலை பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் திரைப்படத்துறையின் பல முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்று, அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில், யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசும் வாய்ப்பு பெற்ற சிவகார்த்திகேயன், நா.முத்துக்குமாருடன் தான் மேற்கொண்ட பயணம் குறித்து உணர்வுபூர்வமாக பகிர்ந்திருந்தார். அதன்போது, “நான் முதன்முதலில் பாடல் எழுதியபோது, அது ஒரு ஜாலியான பாடல். அந்த வரிகளில் உண்மையிலேயே எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் என் வேலை meaningful ஆக இருக்கணும் என்று எண்ணினேன்.”“அதனால்தான், அந்த பாடலுக்காக நான் பெற்ற பணத்தை நான் வைத்துக்கொள்ளக்கூடாது என்று எண்ணினேன். அந்த பணத்தை முத்துக்குமாருக்கு கொடுக்கணும் என்று எண்ணினேன். இது ஒரு உதவியா? இல்லை. இது என் கடமை.”“இன்று இந்த நிகழ்வுகூட அவரின் குடும்பத்துக்கு உதவிக்காக நடத்தப்படவில்லை. இது அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு முயற்சி. அவர் ஹீரோக்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நினைவாக எழுத்துகளைக் கொடுத்தவர். இந்த நிகழ்வு அவருக்கு ஒரு வணக்கமாக இருக்கட்டும்.” என்றார்.சிவகார்த்திகேயனின் உரை நிகழ்ச்சியின் மையமாகவே மாறியது. சமூக வலைத்தளங்களில் இந்த உரை வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள், “நவீன தமிழ் சினிமாவில் நெஞ்சோடு பேசும் பேச்சு இது தான்!” என்று பாராட்டியுள்ளனர்.