Connect with us

பொழுதுபோக்கு

வயது 65, மாஸ் ஹீரோ டூ கொடூர வில்லன்; கூலி படத்தின் கதை இதுதானா?

Published

on

nagarjuna

Loading

வயது 65, மாஸ் ஹீரோ டூ கொடூர வில்லன்; கூலி படத்தின் கதை இதுதானா?

தென்னிந்திய திரையுலகின் ‘மன்மதடு’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் நாகர்ஜுனா அகினேனி, தற்போது தனது வழக்கமான காதல் மற்றும் ஆன்மீக வேடங்களில் இருந்து விலகி, எதிர்மறை கதாபாத்திரத்தில் களமிறங்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் ‘சைமன்’ என்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். இது தென்னிந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு திரையுலகில் நாகார்ஜுனாவை வில்லனாக சித்தரிக்க இயக்குநர்கள் தயங்கிதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கினறன. இதுகுறித்து ஒருவர் கூறுகையில், “எங்கள் தெலுங்கு இயக்குநர்கள் அவரை ஒரு வில்லனாக கற்பனை செய்ததில்லை. ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்,” என்றார். ஆனால், ‘கூலி’ திரைப்படம் மூலம், நாகார்ஜுனா தனது திரையுலக வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். இது அவரது முதல் வில்லன் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் ‘கூலி’ படத்திலிருந்து கசிந்த ஒரு வீடியோ,  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நாகார்ஜுனா ஒரு கொடூரமான கொலையைச் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்னிந்தியாவின் OG ஹார்ட் த்ரோப்’ என அழைக்கப்படும் நாகார்ஜுனா, வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதிப்பாரா என்றும், தெலுங்குத் திரையுலகம் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லையா என்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன.’கூலி’ படத்தின் கதைக்களம் குறித்து பரவி வரும் தகவல்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. ரஜினிகாந்த் தங்க மாஃபியா டானாக இருந்து திருந்தி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது தம்பி ஷபீர் ஷாஹிர், சைமன் (நாகார்ஜுனா) என்பவரின் கீழ் பணிபுரிகிறார்.ஆனால், சைமன் மற்றும் அவரது ஆட்கள் ஷபீரை கொடூரமாக கொலை செய்ய, ரஜினிகாந்த் பழிவாங்கும் நோக்குடன் மீண்டும் பழையபடி செல்கிறார்.  இறுதியில், ரஜினிகாந்திற்கும் சைமனுக்கும் இடையிலான மோதலில் சைமன் கொடூரமாக கொல்லப்படுகிறார்.இந்த கதைக்களம் ஊகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் ‘கூலி’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘கூலி’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் படமாக மாறும் என்றும், நாகார்ஜுனாவை தெலுங்குத் திரையுலகம் இத்தனை காலம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன