பொழுதுபோக்கு
“அங்காடித் தெரு சோபியா” ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிட்டார் பாருங்க: அவர் ஒரிஜினல் பெயர் இதுதான்!

“அங்காடித் தெரு சோபியா” ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிட்டார் பாருங்க: அவர் ஒரிஜினல் பெயர் இதுதான்!
சினிமாவை பொறுத்தவரை, ஆண்டுதோறும் பல நடிகர் நடிகைகள் அறிமுகமாவார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே அடுத்தடுத்த படங்களில் நடிப்பார்களா என்றால் அது கேள்விக்குறிதான். அதேபோல், ஒரு படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நிலைத்திருப்பார்களா என்பது சந்தேகம். ஆனால். ஒரு சில நடிகைகள் ஒரு படத்தில் மட்டும் நடிம்து இன்றுவரை ரசிகர்கள் அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு இருக்கிறார்கள்.அந்த வகையிலான ஒரு நடிகை தான் சுகுனா நாகராஜன். அங்காடி தெரு படத்தில், சோபியா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் இந்த நடிகை. 2010-ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு திரைப்படம் பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள கடை ஊழியர்களின் கடினமான வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், பாண்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தில், சினேகா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தனர். இந்த படத்தில், பாண்டி நடித்த மாரித்து கேரக்டரை காதலிக்கும் சோபியா கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை சுகுனா நாகராஜன். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்தாலும், அதன்பிறகு சுகுணாவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை.தற்போது இவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அங்காடித் தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுகுணா, சொந்தமான ஃபியூட்டி பார்லர் நடித்தி வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், சுகுணா தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டங்களைப் பற்றி மனம் பேசிய அவர், எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சவாலான காலகட்டத்தைக் கடந்து வந்தது. நான் கர்ப்பமாக இருந்தேன், ஆனால் எட்டாவது மாதத்தில் குழந்தையை இழந்தேன். குழந்தை கருப்பையிலேயே இறந்துவிட்டது, அது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் என் கணவர் அந்த சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தார். பின்னர், எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்பகாலத்தில், என் கருப்பு நிறத்தால் நான் மிகவும் தாழ்வுமனப்பான்மையாக உணர்ந்தேன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு எல்லாம் மாறிவிட்டது. அந்தக் காதல் என்னை தாழ்வுமனப்பான்மையில் இருந்து மீட்டெடுத்தது. என் கணவர் என் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றினார் என்று கூறியுள்ளார்.