சினிமா
அஜித்துடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை பகிர்ந்த ஹாக்கி வீரர்.! வைரலான போட்டோஸ்.!

அஜித்துடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை பகிர்ந்த ஹாக்கி வீரர்.! வைரலான போட்டோஸ்.!
இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. இதில் திரைப்படம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஹைலைட்டாக இருந்தது, தமிழ் திரையுலகத்தின் தனித்துவமான நட்சத்திரம் அஜித் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் அஷ்வினுடன் எடுத்த புகைப்படத்தை இந்திய ஹாக்கியின் புகழ்பெற்ற வீரர் ஸ்ரீஜேஷ் பகிர்ந்தது தான். இந்த புகைப்படத்தை ஸ்ரீஜேஷ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்ததுடன், அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீஜேஷிற்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. விழாவின் பின்னர், ஸ்ரீஜேஷ், நடிகர் அஜித் குமாருடன் எடுத்த ஆழமான அர்த்தம் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். இந்த போட்டோ வெளியான சிலமணி நேரங்களிலேயே அதிகளவான லைக்கினை பெற்றுள்ளது.