இலங்கை
அரசு தவறிழைத்தால் மக்கள் விரட்டியடிப்பர்; மைத்திரி தெரிவிப்பு!

அரசு தவறிழைத்தால் மக்கள் விரட்டியடிப்பர்; மைத்திரி தெரிவிப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணம் தவறெனில், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களே கடந்துள்ளன. எனவே,அரசாங்கத்தின் பயணம் சரியா அல்லது தவறா என்பதை ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னரே அறியக்கூடியதாக – உணரக்கூடியதாக இருக்கும்.
பயணம் சரியெனில் மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். தவறான பயணமெனில் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள். நாட்டில் இன்னமும் உரிய மாற்றம் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன். பொருள்களின் விலை அதிகமாக உள்ளது. மக்களுக்கு வாழ்வதற்கு கஷ்டமாக உள்ளது- என்றார்.