சினிமா
இந்த உறவு பெயரிடப்படாதது.. உறுதி செய்த பிக்பாஸ் சுனிதா மற்றும் உமர்?

இந்த உறவு பெயரிடப்படாதது.. உறுதி செய்த பிக்பாஸ் சுனிதா மற்றும் உமர்?
விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சுனிதா. வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தனக்கென்று ஒரு தனி இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் சின்னத்திரையில் முக்கிய நட்சத்திரமாக மாறிய சுனிதா பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுத்தார். ஐந்து வாரங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த சுனிதா பின் எலிமினேட் ஆனார்.தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உமர் மற்றும் சுனிதா இடையேயான உறவு குறித்து பலர் கிசுகிசு பரப்பி வரும் நிலையில், இதற்கு உமர் மற்றும் சுனிதா பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளனர்.அதில், ” நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. சுனிதா ஒரு துணையைப் போல உள்ளார். அவரிடம் எல்லாவற்றையும் பகிர முடியும். இந்த உறவு பெயரிடப்படாதது” என்று தெரிவித்துள்ளனர்.