Connect with us

தொழில்நுட்பம்

ஐ.பி.எல். முதல் ஹாலிவுட் வரை… அமேசான், நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5; பட்ஜெட்டுக்கு ஏற்ற ஓடிடி பிளான் எது?

Published

on

best ott plans

Loading

ஐ.பி.எல். முதல் ஹாலிவுட் வரை… அமேசான், நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5; பட்ஜெட்டுக்கு ஏற்ற ஓடிடி பிளான் எது?

இன்றைய டிஜிட்டல் உலகில், OTT தளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரலை விளையாட்டுகள் என அனைத்தையும் விரல் நுனியில் கொண்டு வந்துள்ள இந்தத் தளங்களில், உங்களுக்கு எது சிறந்தது? என்பதைக் கண்டறிவது சவாலானது. உங்கள் தேவைகள் மற்றும் ரசனைக்கு ஏற்ற சிறந்த OTT சந்தாவைத் தேர்வு செய்ய உதவும் விரிவான வழிகாட்டியை இங்கே காணலாம்.இந்தியாவில் பிரபலமான OTT தளங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள்:1. Disney+ Hotstar (டிஸ்னி+ ஹாட்ஸ்டார்): டிஸ்னி, மார்வெல், ஸ்டார் வார்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற கண்டென்ட்களை வழங்குகிறது. இந்திய ரசிகர்கள் மத்தியில் இதன் பிரபலத்திற்கு முக்கிய காரணம், ஐபிஎல் உட்பட நேரடி கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகள் ஆகும். தமிழ் சீரியல்கள், படங்கள் மற்றும் பிராந்திய மொழி கண்டென்ட்களும் ஏராளமாக உள்ளன. கிரிக்கெட் வெறியர்கள், மார்வெல் யூனிவர்ஸ் ரசிகர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த தேர்வு. விலைகள் ஆண்டுக்கு ரூ.499 முதல் ரூ.1,499 வரை மாறுபடலாம்.2. Amazon Prime Video (அமேசான் பிரைம் வீடியோ): உயர்தர பிரைம் ஒரிஜினல்ஸ் (சர்வதேச மற்றும் இந்தியத் தயாரிப்புகள்), ஹாலிவுட், பாலிவுட் மற்றும் பல்வேறு பிராந்திய மொழித் திரைப் படங்கள், வெப் சீரிஸ்களுக்கு பெயர் பெற்றது. பிரைம் வீடியோ சந்தாவுடன், அமேசான் மியூசிக், அமேசான் ஷாப்பிங்கில் இலவச மற்றும் விரைவான டெலிவரி போன்ற கூடுதல் பலன்களையும் பெறலாம். அமேசான் பிரைமின் மற்ற சேவைகளையும் பயன்படுத்த விரும்புபவர்கள் மற்றும் தரமான சர்வதேச கண்டென்ட்களை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்தது. ஆண்டுச் சந்தா (சுமார் ரூ.1,499) மற்றும் மாதச் சந்தா (சுமார் ரூ.299). 3. Netflix (நெட்ஃபிக்ஸ்): உலகத் தரம் வாய்ந்த ஒரிஜினல்ஸ், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள், விருது பெற்ற வெப் சீரிஸ்கள் மற்றும் ஆவணப் படங்களுக்கு நெட்ஃபிக்ஸ் சிறந்த தளமாகும். இதன் இண்டர்பேஸ் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், பல மொழிகளில் கண்டென்ட்கள் என அனைத்தும் நெட்ஃபிக்ஸ் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. சர்வதேச கண்டென்ட்கள், சிறந்த தரமான படங்கள் மற்றும் சீரிஸ்களை விரும்புபவர்களுக்கு சிறந்தது. விலை ரூ.149 (மொபைல்) முதல் ரூ.649 (4K) வரை மாதத்திற்கு மாறுபடலாம்.4. SonyLIV (சோனிலிவ்): சோனி சேனல்களின் பிரபலமான நிகழ்ச்சிகள், ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான ஒரிஜினல்ஸ் தொடர்கள், அத்துடன் WWE, கால்பந்து போன்ற பல நேரடி விளையாட்டுப் போட்டிகளும் இதன் தனிச்சிறப்பு. கிரைம் மற்றும் திரில்லர் வகைத் தொடர்களுக்கு இது பிரபலமான தளம். சோனி சேனல் நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகள், பிராந்திய மொழி ஒரிஜினல்ஸ் கண்டென்ட்கள் விரும்புபவர்களுக்கு சிறந்தது. ஆண்டுத் திட்டம் சுமார் ரூ.999.5. JioCinema (ஜியோசினிமா): ஐபிஎல் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை இலவசமாக ஒளிபரப்புகிறது என்பது இதன் மிகப்பெரிய கவர்ச்சி. பாலிவுட் மற்றும் பிராந்திய மொழித் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் ஆகியவற்றுடன், சமீபத்தில் Disney+ Hotstar உடன் இணைந்து JioHotstar என்ற புதிய சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும் பகுதி கண்டென்ட்கள் இலவசமாகவே கிடைக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் (குறிப்பாக IPL), இலவச கண்டென்ட் விரும்புபவர்கள், பட்ஜெட் திட்டங்கள் தேடுபவர்களுக்கு சிறந்தது. பேசிக் கண்டெண்ட் இலவசம். பிரீமியம் கண்டெண்ட் மற்றும் விளம்பரமற்ற அனுபவத்திற்கு மாதம் ரூ.29 முதல் ரூ.199 வரை திட்டங்கள் உள்ளன.6. ZEE5 (ஜீ5): ஜீ குழுமத்தின் அனைத்து மொழிகளிலும் உள்ளடக்கங்கள். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள், சீரியல்கள், ஒரிஜினல்ஸ். மாத மற்றும் ஆண்டுத் திட்டங்கள். ஆண்டுத் திட்டம் சுமார் ரூ.499 முதல் ரூ.899 வரை. ஜீ குழும கண்டெண்ட், பிராந்திய மொழி ரசிகர்களுக்கு ஏற்றது.சரியான OTT சந்தாவைத் தேர்வு செய்வதற்கு முன்: நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்கள்? திரைப்படங்கள், தொடர்கள், விளையாட்டு, ஆவணப் படங்கள், அல்லது குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளா? எந்த மொழியில் பார்க்க விரும்புகிறீர்கள்? மாதத்திற்கு (அ) ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்கள்? ஒவ்வொரு தளத்திற்கும் வெவ்வேறு விலை திட்டங்கள் உள்ளன. எத்தனை சாதனங்களில் (மொபைல், டிவி, லேப்டாப்) ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும்? பிரீமியம் திட்டங்கள் பொதுவாக அதிக சாதனங்களை ஆதரிக்கும். HD, Full HD அல்லது 4K போன்ற உயர் தரத்தில் பார்க்க விரும்புகிறீர்களா? தரத்திற்கு ஏற்ப விலை அதிகரிக்கலாம்.சில டெலிகாம் நிறுவனங்கள் (Vi, Jio, Airtel) அல்லது இணைய சேவை வழங்குநர்கள் (ISP-கள்) தங்கள் இன்டர்நெட் (அ) மொபைல் திட்டங்களுடன் OTT சந்தாக்களை இணைத்து வழங்குகின்றன. இது தனித்தனியாக வாங்குவதை விட மலிவானதாக இருக்கலாம். உதாரணமாக, Vi தனது Vi Movies & TV Plus திட்டங்களில் 17 OTT தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது. மலிவான திட்டங்களில் விளம்பரங்கள் வரலாம். விளம்பரங்கள் இல்லாத அனுபவம் வேண்டுமென்றால், பிரீமியம் திட்டங்களைத் தேர்வு செய்யவும்.உங்கள் ‘சிறந்த’ OTT எது?உண்மையில், “சிறந்த” OTT சந்தா என்பது உங்கள் தனிப்பட்ட ரசனைகள், பார்க்கும் பழக்கம் மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்தது. கிரிக்கெட் ரசிகராக இருந்தால் Disney+ Hotstar அல்லது JioCinema சிறந்தது. தரமான சர்வதேச ஒரிஜினல் கண்டென்ட்கள் விரும்பினால் Netflix அல்லது Amazon Prime Video ஏற்றது. பல்வேறு OTT தளங்களின் கண்டென்ட்களை ஒரே திட்டத்தில் பெற விரும்பினால், டெலிகாம் அல்லது ISP-கள் வழங்கும் பல்க் திட்டங்களை கருத்தில் கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன