Connect with us

இலங்கை

காதலியான பதின்மவயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் உறவு

Published

on

Loading

காதலியான பதின்மவயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் உறவு

  கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 18 வயது இளைஞர் ஒருவர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் வென்னப்புவ, நைனமடம, வெல்லமங்கராய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

லுனுவில, கிரிமதியனவத்தையில் வசிக்கும் பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,

கடந்த 14 ஆம் திகதி மதியம் தனது மகள் வீட்டிலிருந்து காணாமல் போனதாகவும்,  மினுவாங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேக நபருடன் இருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது கணவருடன் அங்கு சென்று தனது மகளையும் இளைஞனையும் அழைத்து வந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில் அந்த இளைஞனுடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், தனது காதலனின் வேண்டுகோளின் பேரில் தான் அவருடன் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை அழைத்துச் சென்ற காதலன் மூன்று நாட்களாக குடும்ப உறவில் ஈடுபட்டதாக சிறுமி பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கைது செய்யப்பட்ட இளைஞர் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன