இலங்கை
கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞனுக்கு சோகம்!

கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞனுக்கு சோகம்!
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 29 வயதுடை யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.