இலங்கை
கொழும்பில் 70 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை

கொழும்பில் 70 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை
கொழும்பு – பத்தரமுல்ல பகுதியிலுள்ள அரசுடன் இணைக்கப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றில் அதிக விலைக்குக் குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அந்த விடுதியில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவேண்டிய குடிநீர் போத்தல் ஒன்று 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தல் ஒன்று 70 ரூபாய் என்ற அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும்.
எனினும் , அதே அளவிலான இரண்டு குடிநீர் போத்தல்கள் 800 ரூபாய்க்கு விடுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.