இலங்கை
கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை உயர்வு குறித்து இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கருத்து தெரிவிக்கையில் வார இறுதியில் இறைச்சியின் விலை ஓரளவு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்களில் 1100 ரூபா 1200 என பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நிர்ணயிக்கப்பட்ட விலையில் தற்போது கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதில்லை.
எனவே, கோழி இறைச்சிக்கு உரிய விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதுடன், விலையையும் குறைக்குமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.