பொழுதுபோக்கு
சிறார்கள் பற்றி தவறான சித்தரிப்பு: பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

சிறார்கள் பற்றி தவறான சித்தரிப்பு: பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
வெற்றிமாறன் மற்றும் அனுரான் காஷ்யப் ஆகியோர் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கியுளள் பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசரை சமூகவலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது,பேட் கேர்ள் (‘Bad Girl’) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, ஒரு சமூக ஆர்வலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்களின் மரியாதையும் சமூக ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது எனக் குறிப்பிட்டு, அந்த டீசரை யூட்யூப், ட்விட்டர் (X), பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து இணையதளங்களிலும் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சங்கரன் கோவிலை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டீசரில் பெண்கள் மற்றும் சிறார்கள் குறித்து குறித்த அவமதிக்கத்தக்க காட்சிகளும், சொற்களும் இடம் பெற்றுள்ளன.இது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான தவறான எண்ணங்களை ஊக்குவிக்கக்கூடியது. படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே டீசரில் இத்தகைய உள்ளடக்கம் இடம் பெறுவது, சமூக ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, டீசரை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் அகற்ற தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும், பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் விசாரணை நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, சமூக ஊடகங்களில் பெண்களை அவமதிக்கும் விதமான உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.வர்ஷா பரத் இயக்கியுள்ள இந்த பேட் கேர்ள் படத்தில், அஞ்சலி சிவராமன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் மற்றும் அனுரான் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் நடிகை பானுப்பிரியாவின் தங்கை சாந்தி பிரியா சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். டீஜே.அருணாச்சலம் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.