இலங்கை
சிறுவனை நாயை விட்டு கடிக்க வைத்த கொடூரம்; வைரலான காணொளியால் சிக்கிய உரிமையாளர்

சிறுவனை நாயை விட்டு கடிக்க வைத்த கொடூரம்; வைரலான காணொளியால் சிக்கிய உரிமையாளர்
இந்தியாவில் சிறுவன் ஒருவரை தமது வளர்ப்பு நாயைக் கொண்டு கடிக்கச் செய்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
உரிமையாளரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் ஒரு சிறுவனை மாத்திரம் பிடித்து வைத்துக் கொண்ட நாயின் உரிமையாளர், அந்த சிறுவனை தமது நாயை கொண்டு கடிக்கச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகச் சிறுவனுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.