Connect with us

இலங்கை

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் இலங்கை தமிழர் கடைகளுக்கு ஆபத்து!

Published

on

Loading

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் இலங்கை தமிழர் கடைகளுக்கு ஆபத்து!

  சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக லிட்டில் ஸ்ரீலங்கா அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ளவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.

பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது.

Advertisement

1980 ஆம் ஆண்டுகளில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது.

இந்நிலையில் விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன