சினிமா
சூர்யாவின் ‘கருப்பு’ டீசர் ஜூலை 23ல் வெளியாகிறது!பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

சூர்யாவின் ‘கருப்பு’ டீசர் ஜூலை 23ல் வெளியாகிறது!பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!
நடிகர் சூர்யா தற்போது இரு முக்கியமான திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் த்ரில்லர் அடிப்படையிலான இந்த படம், ரசிகர்களிடம் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இந்தநிலையில், தனது 50வது பிறந்த நாளை (ஜூலை 23) குடும்பத்தினருடன் கொண்டாட சூர்யா தற்போது சென்னைக்கு வந்துள்ளார். சிறப்பு செய்தியாக, இவருடைய பிறந்தநாளையொட்டி ‘கருப்பு’ படத்தின் டீசர் அதே நாளில் வெளியிடப்படவுள்ளது. அதோடு, படம் வெளியாகும் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் 46வது படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.