சினிமா
டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 வெற்றியாளர் இவர் தான்.. பரிசு தொகை இத்தனை லட்சமா

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 வெற்றியாளர் இவர் தான்.. பரிசு தொகை இத்தனை லட்சமா
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் சீசன் 3ன் பைனல் நேற்று நடைபெற்றது. இதற்கு நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக சென்று கலந்துகொண்டிருந்தார்.இதில் இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர். அதில் பிரஜனா – கங்கனா, தில்லை – ப்ரீத்தா, சபரீஷ் – ஜனுஷிகா, நிதின் – தித்யா, திலீப் – மெர்சீனா ஆகிய ஐந்து ஜோடிகள் தான் இறுதி போட்டிக்கு தேர்வாகினார்கள்.மிகவும் கடுமையான நடைபெற்ற பைனல் போட்டியில் அனைவரையும் மிரள வைத்த நிதின் மற்றும் தித்யா ஜோடி டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். அவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து இரண்டாவது இடத்தை தில்லை – ப்ரீத்தா ஜோடி பிடித்துள்ளனர்.வெற்றிபெற்றவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் வெற்றிபெற்ற நிதின், தனக்கு கிடைத்துள்ள ரூ. 10 லட்சம் பரிசு தொகையை வைத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அவரே மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார்.இதில் “என்னுடைய தந்தைக்கு கிட்னி ஆபரேஷன் பண்ணுவேன். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். காசு இல்லாததால் கிட்னி ஆபரேஷன் செய்யமுடியவில்லை. நான் வெற்றிபெற்று அந்த பணம் கிடைத்தால் அப்பாவுக்கு ஆபரேஷன் செய்வேன்” என கண்கலங்கி பேசினார்.இதன்பின் மேடைக்கு வந்த நடிகை சினேகா, ” அப்பாவுக்கு ஆபரேஷன் செய்ய இரண்டு மருத்துவமனையில் பேசி இருக்கிறேன்”. கிட்னி கிடைத்த உடனே அப்பாவுக்கு ஆபரேஷன் செய்வோம். செலவை நாங்களே பார்த்து கொள்கிறோம்” என கூறினார்.