சினிமா
தனுஷ் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் Big Surprise..! என்ன தெரியுமா.?

தனுஷ் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் Big Surprise..! என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். பல்வேறு விதமான படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்திருந்தார். தனுஷ் தேர்ந்தெடுக்கும் கதைகளும், அவரது நடிப்பு திறமையும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.இந்நிலையில், தனுஷின் பிறந்த நாள் (ஜூலை 28) முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு சப்பிறைஸ் கொடுப்பதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. அந்தவகையில், அவர் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் தெலுங்கு ரீமேக் ‘மிஸ்டர் கார்த்திக்’, மீண்டும் திரையரங்குகளில் ஜூலை 27 வெளியாவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.‘மயக்கம் என்ன’ படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் அந்த நேரத்தில் மிகப் பெரிய அளவிலான வெளியீடு கிடைக்காத நிலையில், தற்போது அந்த படத்தின் Re-release தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இப்படம் ஜூலை 27-ம் தேதி ரிலீஸாவது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.