பொழுதுபோக்கு
நடுவர் வரலட்சுமி சரத்குமார், சிறப்பு விருந்தினர் விஜய் ஆண்டனி: “டான்ஸ் ஜோடி டான்ஸ்” பைனல் அப்டேட்!

நடுவர் வரலட்சுமி சரத்குமார், சிறப்பு விருந்தினர் விஜய் ஆண்டனி: “டான்ஸ் ஜோடி டான்ஸ்” பைனல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ-டோடட் 3-ல் (Dance Jodi Dance Reloaded 3) நடனக் கலைஞர்களும் பிரபலங்களும் ஜோடியாக இணைந்து, பரபரப்பான, மறக்க முடியாத நிகழ்ச்சிகளை வழங்கினர். இறுதிப் போட்டியில் பங்கேற்ற 5 சிறந்த ஜோடிகளும், தங்களால் முடிந்த சிறந்த நடனங்களை வெளிப்படுத்த பார்வையாளர்கள் உற்சாகமாகக் கைதட்டி ஊக்கப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியின் நடுவர்களான பாபா பாஸ்கர், ஸ்நேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார், தங்கள் அறிவுரைகளும் ஊக்கத்தாலும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். அந்த மாலை மிகவும் சிறப்பாக இருக்க, சிறப்பு விருந்தினராக வந்த விஜய் ஆண்டனி போட்டியாளர்களை பாராட்டினார். வழக்கம்போல், அரங்கேற்றத்தை மகிழ்ச்சியாக்க ஆர்.ஜே. விஜய் மற்றும் மணிமேகலை தங்கள் நகைச்சுவையால் ரசிகர்களை ரசிக்க வைத்தனர்.இந்த சீசன் சிறப்பு, நடனங்களுடன் கூடவே போட்டியாளர்களின் வாழ்க்கைப் பயணங்களும் அவர்களின் சவால்களை எதிர்கொண்டு முன்னேறிய விதம், நிகழ்ச்சியை மிகவும் மனதுக்கு தொட்டவாறு மாற்றியது. வெற்றிப் பெற்ற ஜோடியான நிதின் மற்றும் டித்தியா தொடர்ந்து காட்டிய முயற்சி, சிறப்பான நடனம் மற்றும் புதுமையால் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றனர். முதல் ரன்னர் அப்பாக தில்லை மற்றும் ப்ரீத்தா ஆகியோர் பிடித்தனர்.இரண்டாவது இரண்டாம் ரன்னர் அப்பாக பிரகனா மற்றும் காகனா ஆகியோர் தங்கள் சிறந்த நடனத்தால் அனைவரையும் கவர்ந்தனர். வெற்றி பற்றி பேசிய நிதின் மற்றும் டித்தியா, “டான்ஸ் ஜோடி டான்ஸ் எங்களுக்கு வாழ்க்கையை மாற்றிய அனுபவம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புதிய சவாலாக இருந்தது. இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளனர். இந்த சீசன் பிரம்மாண்டமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த சீசன் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.