Connect with us

பொழுதுபோக்கு

நான் சாதாரணமா பேசியது, படத்தில் பவர்ஃபுல் வசனமா இருக்கு; காலா படத்தின் ஒரிஜினல் கரிகாலன் இவர்தான்!

Published

on

mumbai

Loading

நான் சாதாரணமா பேசியது, படத்தில் பவர்ஃபுல் வசனமா இருக்கு; காலா படத்தின் ஒரிஜினல் கரிகாலன் இவர்தான்!

காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் எழுதி இயக்கி, தனுஷ் தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களின் நில உரிமைப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு காலா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், தாராவியின் தலைவராகவும், தனது மக்களை நில அபகரிப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு கரிகாலன் “காலா” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாராவியை “தூய்மை மும்பை” திட்டத்தின் கீழ் மேம்படுத்த முயற்சிக்கும் ஹரிதேவ் அபயங்கர் (நானா படேகர்), ஒரு அரசியல்வாதி மற்றும் முன்னாள் தாதா, காலாவின் முக்கிய எதிரியாக வருகிறார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்களும், நிலம் குறித்த அரசியல் தத்துவங்களுமே படத்தின் முக்கிய கருவாக அமைகின்றன. இந்நிலையில் தாராவியின் தலைவராக நடித்த காலா கதாபாத்திரத்தின் உண்மையான காலா மாரி பாய் அப்படத்தை பற்றி ரெட்நூல் பக்கத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். மாரிபாய் என்பவர் தனது நிஜ வாழ்க்கை அனுபவங்கள் காலா திரைப்படத்தில் எவ்வாறு பிரதிபலித்தன என்பதைப் பற்றிப் பேசியுள்ளார். குறிப்பாக, படத்தின் கதாபாத்திரங்களும் கதையும் தாராவி மக்களின் வாழ்வியலோடு ஒத்துப்போனதா என்ற கேள்விக்கு, “அப்படியே அவுட்புட்டா இருந்துச்சுன்னு சொல்ல முடியும்” என்று பதிலளித்துள்ளார்.இயக்குனர் ரஞ்சித் மற்றும் அவரது குழுவினர் மாரிபாயின் வாழ்க்கையை மிக நுணுக்கமாக கவனித்து, அவரது அசைவுகள் மற்றும் பேசும் விதத்தைக்கூட காலா படத்தில் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அவர் கூறினார்.  உதாரணத்திற்கு, வெளிநாட்டில் இருந்து வந்த தனது நண்பனை “உக்காருடா, என்ன கேட்டா வந்த? நான் சொல்லாம போகக்கூடாது உக்காரு” என்று சொன்ன ஒரு சாதாரன நிகழ்வு, காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பேசும் பவர்ஃபுல் வசனமாக மாறியுள்ளதை அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறார்.மேலும், தாராவி பகுதியில் உள்ள தனது வீடு, சுற்றுப்புறம், மற்றும் அவரது குடும்ப வாழ்க்கை (குறிப்பாக அவரது மகன்கள்) போன்ற பல அம்சங்கள் திரைப்படத்தில் அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தனது வாழ்க்கையின் கஷ்டங்கள் மற்றும் தான் கடந்து வந்த பாதையில் உள்ள ஆபத்துகள் அனைத்தும் முழுமையாகத் திரைப்படத்தில் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன