Connect with us

இலங்கை

பந்தல் கால் நாட்டலும் காளாஞ்சி வழங்கலும்!

Published

on

Loading

பந்தல் கால் நாட்டலும் காளாஞ்சி வழங்கலும்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹாற்சவம் எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மஹோற்சவத்தினை முன்னிட்டு நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டலும், செங்குத்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான களாஞ்சி வழங்கும் இன்று நடைபெற்றது.

Advertisement

கருவறையில் வீற்று இருக்கும் அலங்காரவேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது. காலை 08.30 மணி சுப நேரத்தில் தேவஸ்தான பிரதம குரு வைகுந்தகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டி வைத்தனர். தொடர்ந்து மாட்டு வண்டி மூலமாக சென்று செங்குத்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான களாஞ்சியும், மஹோற்சவ நாளிதழினையும் வழங்கிவைத்தனர். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

25 நாட்கள் இடம்பெறும் மஹோற்சவமானது எதிர்வரும் 29.07.2025 அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி 22.08.2025 அன்று கொடியிறக்கத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன