வணிகம்
மாணவர்களுக்கான கிரெடிட் கார்டு; தள்ளுபடிகளை அள்ளித் தரும் டாப் வங்கிகள்

மாணவர்களுக்கான கிரெடிட் கார்டு; தள்ளுபடிகளை அள்ளித் தரும் டாப் வங்கிகள்
கிரெடிட் கார்டுகள் இக்காலத்தில் மாணவர்களுக்கும் கூட ஒரு அத்தியாவசிய கருவியாக மாறிவிட்டன. எளிதில் கடன் பெறுவதற்கோ, அவசரகால தேவைகளை பூர்த்தி செய்வதற்கோ அல்லது ஒரு நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கோ கிரெடிட் கார்டுகள் மிகவும் உதவியாக இருக்கும். பல நிதி நிறுவனங்கள் இளம் கல்லூரி மாணவர்களின் தேவைகளை மையமாக கொண்ட கிரெடிட் கார்டுகளையும் வழங்குகின்றன. இந்த கிரெடிட் கார்டுகள் வட்டி இல்லாத காலம், குறைந்த பராமரிப்பு செலவுகள் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.1. எஸ்.பி.ஐ ஸ்டுடெண்ட் ப்ளஸ் அட்வாண்டேஜ் கிரெடிட் கார்டு (SBI Student Plus Advantage Credit Card): பெயரிலேயே உள்ளது போல, இந்தக் கிரெடிட் கார்டு கல்லூரி செல்லும் மாணவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கல்விக் கடன் பெற்றுள்ளவர்கள் அல்லது எஸ்.பி.ஐ கிளையில் நிலையான வைப்பு நிதி (Fixed Deposit) வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தக் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் கார்டை பயன்படுத்தி செலவளிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் 1 ரிவார்டு புள்ளியை பெறலாம். இந்த புள்ளிகள் கிரெடிட் கார்டு பில்லை தீர்க்க பயன்படுத்தப்படலாம். இது செலவுகளை நிர்வகிக்க ஒரு நடைமுறை வழியை வழங்குகிறது.2. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஸ்டுடெண்ட் ஃபொரேக்ஸ் ப்ரீபெய்டு கிரெடிட் கார்டு (ICICI Bank Student Forex Prepaid Credit Card):இந்த கிரெடிட் கார்டு வெளிநாட்டில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ரூ 499 சேவை கட்டணத்துடனும், ரூ. 199 வருடாந்திர கட்டணத்துடனும் வருகிறது. இது ரூ. 590 மதிப்புள்ள சர்வதேச மாணவர் அடையாள அட்டை உறுப்பினர் நன்மையையும் வழங்குகிறது. மேலும், அதிக லக்கேஜ் (excess baggage) மீது 40% தள்ளுபடியும், டி.ஹெச்.எல் கூரியர் சேவையில் 20% தள்ளுபடியும் கிடைக்கும். கார்டு பயன்படுத்துபவர்களுக்கு குரோமா ஷாப்பிங் வவுச்சரும் கிடைக்கும்.3. ஐ.சி.ஐ.சி.ஐ கோரல் கான்டக்ட்லெஸ் கிரெடிட் கார்டு (ICICI Coral Contactless Credit Card):இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பொதுவான செலவுகளில், ஒவ்வொரு ரூ.100-க்கும் இரண்டு பேபக் புள்ளிகளையும், அதே தொகைக்கு பயன்பாடுகள் மற்றும் காப்பீட்டில் செலவளிக்கப்படும் ரூ.100-க்கு ஒரு பேபக் புள்ளியையும் பெறலாம். இந்த ரிவார்டு அமைப்பு, கார்டு வைத்திருப்பவர்களுக்கு விரைவாக புள்ளிகளைக் குவித்து, அவர்களின் ஒட்டுமொத்த நன்மைகளை மேம்படுத்துகிறது. BookMyShow மற்றும் Inox இல் ஒரு பரிவர்த்தனைக்கு குறைந்தபட்சம் இரண்டு திரைப்பட டிக்கெட்டுகளை வாங்கும் போது, ரூ.100-க்கு மிகாமல் 25% தள்ளுபடியை பெறுகின்றனர். இந்த சலுகை மாதத்திற்கு இருமுறை கிடைக்கிறது.