இலங்கை
முட்டை விலை குறைப்பு!

முட்டை விலை குறைப்பு!
நாட்டில் முட்டை விலையை குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு (20.07.2025) நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது உள்ள விலையிலிருந்து, மேலும் இரண்டு ரூபாய் குறைக்க முடிவு செய்ப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், சரத் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், “தற்போது கோழிகள் அதிக அளவில் காணப்படுவதால் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறு விவசாயிகள் தங்கள் தொழிலைத் தொடர முடியாத சூழ்நிலையை உருவாக்குவதால், ஒரு சங்கமாக, கிராமப்புற தொழில்துறையை மேம்படுத்தவும், தாய் (கோழி) விலங்குகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் உடனடியாக தலையிடுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த முடிவு, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான விவசாயிகள், சிறு, நடுத்தர மற்றும் வர்த்தகர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் கொழும்பு மொத்த விற்பனையாளர்கள் குழுவால் நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.